×

விஜய் கட்சி நிலைமை பரிதாபமாக இருக்கிறது: ராஜேந்திர பாலாஜி கவலை

 

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தின் தேர்தல் களம் மாறி உள்ளது. எடப்பாடி பழனிசாமி பொறுமையாக காய்களை நகர்த்தி வருகிறார். அதிமுக ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். கூட்டணி கட்சிகளின் பலத்துடன் தேர்தலை சந்திக்கிறோம். இதில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்போம்.

அதிமுகவுக்கு வயது 53. இந்த கட்சியை அழிக்க யார் யாரோ எவ்வளவோ முயற்சி செய்தனர். யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவுக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது. அனைத்து பகுதியிலும் இளைஞர்கள் அதிகளவில் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இனி அதிமுகவுக்கு அழிவே கிடையாது. தனித்து தேர்தல்களம் காணும் விஜய் கட்சி நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

Tags : Vijay ,Rajendra Balaji ,Sivakasi ,Rajendrabalaji ,minister ,Virudhunagar district ,Tamil Nadu ,Edappadi Palanisami ,Alliance ,
× RELATED திராவிடமாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சி:...