×

கண்டுகொள்ளாத பாஜ… அப்செட்டில் பாமக…

 

ஊட்டி: அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் பாஜ வேட்பாளர் போஜராஜன் போட்டியிடுகிறார். இவர், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போது, குறிப்பிட்ட சமுதாய மக்களை மட்டுமே அழைத்து செல்கிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வந்தது. இதனை உறுதி செய்யும் வகையில், தற்போது நீலகிரி மாவட்ட பாமகவிற்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட பாமக நிர்வாகிகளை கண்டு கொள்ளாத பாஜ வேட்பாளர், ‘எங்கு சென்றாலும், பாமக நிர்வாகிகளை அழைத்து செல்வதில்லை.

மேலும், பிரசாரம் செய்யும் இடங்களிலும் பாமக பெயரை குறிப்பிடுவதில்லை’ என தெரிகிறது. இதற்கு சான்றாக, நேற்று ஊட்டியில் பாஜ வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி, ஏடிசி பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, நீலகிரி மாவட்ட பாமக தலைவர் உட்பட நிர்வாகிகள் யாரையும் மேடை ஏற்ற விடவில்லையாம். இதனால், பாமக நிர்வாகிகள் அப்செட் ஆகி அங்கிருந்து சென்றனர். மேலும், கூட்டம் முடிவதற்குள்ளேயே தாங்கள் வைத்திருந்த கொடிகளையும் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர்.

Tags : Bamaka ,Adimuga alliance ,BAJA CANDIDATE ,BOJARAJAN ,ADAMUKA ALLIANCE ,NEILGIRI DISTRICT ,
× RELATED திராவிடமாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சி:...