×

வேட்பாளர் மகேஷ் முன்னிலையில் அஞ்சுகிராமம் முன்னாள் அதிமுக துணைத்தலைவர் திமுகவில் இணைந்தார்

நாகர்கோவில், ஏப்.14: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் மகேஷூக்கு மாற்றுக்கட்சியினர், ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலர் தங்கள் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அஞ்சுகிராமம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். அஞ்சுகிராமம் பேரூராட்சி முன்னாள் அதிமுக துணைத்தலைவர் கெவின் குமார் தலைமையில், ஏராளமான இளைஞர்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தொகுதி வேட்பாளருமான மகேஷ் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இணைப்பு நிகழ்வின்போது, அஞ்சுகிராமம் பேரூராட்சி துணைத்தலைவர் காந்தி ராஜ், பேரூர் அவைத்தலைவர் துரைபாண்டியன், கிளை செயலாளர்கள் ரதீஷ், சதீஷ்குமார், கலியுக ராமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். மாற்றுக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை வேட்பாளர் மகேஷ் சால்வை அணிவித்து வரவேற்றார். கன்னியாகுமரி தொகுதியில் முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வருவது, திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்துள்ளதாக அஞ்சுகிராமம் பகுதி திமுகவினர் தெரிவித்தனர்.

Tags : AIADMK ,vice ,president ,Anjugramam ,DMK ,Mahesh ,Nagercoil ,Secular Progressive Alliance ,Kanyakumari ,2026 Tamil Nadu Assembly elections ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...