×

திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் அதிமுக ஆட்சி அமைந்தால் மக்கள் வாழ்க்கை மேம்படும்: வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பேச்சு

திருப்பரங்குன்றம், ஏப். 12: திருப்பரங்குன்றம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பாவை ஆதரித்து, நடிகை குஷ்பு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் மே ம்படும் என்றார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ வேட்பாளராக உள்ளார். இவர் கடந்த 4ம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியின் மதுரை, சிந்தாமணி, மேலஅனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் விவி.ராஜன் செல்லப்பாவை ஆதரரித்து பாஜ மாநில துணைத்தலைவர் நடிகை குஷ்பு நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர் மற்றும் குஷ்புவை பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்களிடம் குஷ்பு பேசும்போது, ‘‘உலகில் மிகச்சிறந்த தலைவர் மோடியால், நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இதேபோல் எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது. மக்களுக்கு பாதுகாப்பு, அடிப்படை வாழ்வாதாரம் அவசியம். நம் குழந்தைகளின் எதிர்கால நலன் சிறப்பாக அமைய வேண்டும். இதற்கு அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எடப்பாடியார் முதல்வரானதும் உங்கள் வங்கி கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்படும். பிரிட்ஜ் உள்பட தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தும் உங்களை வந்தடையும். அரசுப் பேருந்தில் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் இலவச பயணம் என்று எடப்பாடியார் கூறியுள்ளார். எனவே ஆண்கள், பெண்களை சமமாக கருதும் அதிமுகவுக்கு வாக்களித்தால், அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் எல்லாருடைய வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவார்கள்’’ என்றார்.

 

Tags : Thiruparankundram ,AIADMK government ,Khushbu ,AIADMK ,V.V. Rajan Chellappa ,Tamil Nadu ,V.V. Rajan ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...