பொன்னமராவதி,ஏப்.11: பொன்னமராவதியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் அதிமுக, தவெக மற்றும் பல்வேறு கட்சியைச்சேர்ந்த சுரேஷ், இளையராஜா தலைமையில் இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். புதிதாக சேர்ந்த இளைஞர்கள் அமைச்சர் ரகுபதிக்கு ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்தனர்.
புதிதாக திமுகவில் சேர்ந்த இளைஞர்களுக்கு திமுக கட்சி வேஷ்டி மற்றும் துண்டு அணிவித்து அமைச்சர் ரகுபதி வரவேற்றார். இதில் ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி, நகரச்செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் இளையராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, நிர்வாகிகள் சுந்தரிராமையா, சீமாட்டிலத்திப், ஆலவயல் சாமிநாதன், அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
