×

12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

துவரங்குறிச்சி, ஏப். 9: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு அருகேயுள்ள களுவன்குளம் குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

நிலை அலுவலர் மனோகர் மற்றும் முன்னணி தீயணைப்பு வீரர் வேல்முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறிது நேர போராட்டத்திற்கு பின் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Tags : Dhuvarankurichi ,Dhuvarankurichi Fire Department ,Kaluvankulam ,Valanadu ,Dhuvarankurichi, Trichy district ,Station Officer ,Manohar ,
× RELATED மணப்பாறையில் வாக்களர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி