×

வையம்பட்டி அருகே போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

மணப்பாறை, ஏப். 13: வையம்பட்டி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மாடியில் துணி காய வைத்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம், அணியாப்பூர் ராமலிங்கம் மகன் சுப்பிரமணி(52), என்பவர் தகாத முறையில் சைகை காட்டி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்துள்ள மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார், சுப்பிரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Tags : Vaiyampatti ,Manapparai ,Trichy district ,
× RELATED மணப்பாறையில் வாக்களர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி