×

வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

துவரங்குறிச்சி, ஏப். 6:திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சுமார் (65) வயது மதிக்கத்தக்க முதியவர் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது. அவருக்கு பின்னால் திருச்சியிலிருந்து மேலூர் நோக்கி சென்ற கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை கைபற்றி விசாரித்து வருகின்றனர்.

 

 

Tags : Dhuvarankurichi ,Trichy-Madurai National Highway ,Dhuvarankurichi, Trichy district ,Trichy ,Melur ,
× RELATED மணப்பாறையில் வாக்களர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி