×

சோஷியல் மீடியாக்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி நிரந்தர முழுக்கு

கடந்த செப்டம்பர் மாதம் ஒரு அவசர அறிக்கையை வெளியிட்டு, ‘மன நிம்மதி தேடி தனது சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாக’ ஐஸ்வர்யா லட்சுமி அறிவித்தார். பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். தற்போது அவர் நடித்த ‘கட்டா குஸ்தி 2’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சோஷியல் மீடியாவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘எனது போட்டோக்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு வந்தது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில் உலகமே என்னை கைவிட்டது போல் இருந்தது. சோஷியல் மீடியாவில் இருந்து வெளியேறி, மனிதர்களுடன் நேரில் பார்த்து பேசி பழகுவதுதான் நிம்மதி தருகிறது. இனிமேல் நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும், இன்ஸ்டாகிராம் உள்பட எந்த சோஷியல் மீடியாவுக்கும் திரும்ப மாட்டேன். அதிலிருந்து விலகியது மன அமைதியை கொடுத்துள்ளது’ என்றார். கடந்த சில வருடங்களாக ஐஸ்வர்யா லட்சுமியின் போட்டோக்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வந்தது. இதனால் மனம் வெறுத்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனினும், ‘மீண்டும் சோஷியல் மீடியாவுக்கு வந்து, அதை உங்கள் திரையுலக வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்’ என்று, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அவர் நிராகரித்துவிட்டார்.

Tags : Aishwarya Lakshmi ,
× RELATED புதிய பயணத்தை தொடங்கிய சாக்‌ஷி அகர்வால்