×

தனது இறப்புக்கு பிறகு இசைக்க வேண்டிய பாடலை உருவாக்கிய ஜாக்கி சான்

ஹாங்காங்: உலக புகழ்பெற்ற நடிகரும், தற்காப்பு கலைஞருமான ஜாக்கி சானின் அதிரடி சண்டை காட்சிகளுக்கென்று உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 72 வயதை கடந்துள்ள அவர் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

சினிமாவை தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த மனிதராக அறியப்படும் ஜாக்கி சான், சில மாதங்களுக்கு முன்பு, தான் சம்பாதித்த ரூ.3400 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை அவரது மகனுக்கு கூட எழுதி வைக்காமல், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் தனது அறக்கட்டளைக்கு வழங்கி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதேபோல தான் இறந்த பிறகு இறுதி ஊர்வலத்தில் இசைக்க வேண்டிய பாடலை இப்போதே ஜாக்கிசான் ரகசியமாக பதிவு செய்து வைத்துள்ளார். தான் மறைந்த பிறகே வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அப்பாடலை அவர் உருவாக்கியுள்ளார். அப்பாடலில் அவரது வாழ்க்கை பயணத்தையும், உலக மக்களுக்கு சொல்ல விரும்பும் இறுதி செய்தியையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags : Jackie Chan ,Hong Kong ,
× RELATED சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்