×

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு: 11 பேர் கைது

சிவகாசி: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே ராம்பிரகாஷ் (32), இன்னாசி முத்து (44), ஐயப்பராஜ் (37) ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது பாண்டித்துரை (35) என்பவர் உயிரிழந்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு இப்பகுதியில் 72 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போது விவசாயம் நடைபெறவில்லை. இந்நிலையில், ரவீந்திரனின் மகன்கள் ராம் பிரகாஷ் (30), ராமச்சந்திரன் (40) ஆகியோர் நிலத்திலுள்ள கிணற்று பகுதியில் தகரஷெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில் இந்த தகர செட்டில் வழக்கம்போல் ராம்பிரகாஷ், ராமச்சந்திரன் உட்பட 3 பேர் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது, உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராம் பிரகாஷ் மற்றும் வாலிபர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ராமச்சந்திரன் (40) படுகாயமடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமைடந்த ராமச்சந்திரன் மற்றும் பலியான ராம் பிரகாஷ், வாலிபரின் உடல்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டவிரோத பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Sivakasi ,Ramprakash ,Inasi Muthu ,Aiyaparaj ,Pandithurai ,
× RELATED உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்...