×

கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரிப்பு

 

டெல்லி: கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மதுரையில் 11 ஆயிரத்து 340 கோடியிலும், கோவையில் 10 ஆயிரத்து 740 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்தது.
இதனை பரிசீலித்த ஒன்றிய அரசு குறைவான மக்கள் தொகை, போக்குவரத்து பயண நேரம், மெட்ரோ ரயிலில் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது போன்ற காரணங்களை கூறி இந்த திட்டங்களை நிராகரித்திருந்தது.

இதற்கிடையே, புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசும் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடந்த மே மாதம் கடிதம் எழுதியது.எனினும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்குப் பதிலாக, பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் பிஆர்டிஎஸ் எனப்படும் பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் தொகையை மட்டும் அளவுகோலாக வைக்காமல் முழுமையாக ஆய்வு செய்த பிறகே கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்திருப்பதாகவும் ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.

 

Tags : Union Government ,Goa ,Madurai ,Delhi ,Madura ,
× RELATED 5, 10 கிலோ காஸ் சிலிண்டர்களுக்கு விரைவு...