உடுமலை, ஜூலை 14: உடுமலை அருகே உள்ள செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் சின்னப்புதூர் கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர்.இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. பள்ளி மெயின் ரோட்டின் அருகில் உள்ளது.
மாணவர்கள் திறந்தவெளியில் விளையாடும்போது எதிர்பாராதவிதமாக வாகனங்கள் மோதும் ஆபத்து உள்ளது. மாணவர்களும் சாலைக்கு சென்று விளையாடும் நிலை உள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
