×

துங்காவி ஊராட்சியில்வரி வசூல் பணி தீவிரம்

உடுமலை, ஜூலை 14: மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் துங்காவி ஊராட்சியில் 2025-26ம் ஆண்டு மற்றும் 2026-27ம் ஆண்டிற்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம் வசூல் செய்வதற்கான சிறப்பு முகாம் துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட 10 குக்கிராமங்களிலும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த வரி வசூல் முகாம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் மூலம் நடைபெற்று வருகிறது.
வீட்டு வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும் எனவும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி செயலர் இசாக் வீடு வீடாக சென்று வரி வசூல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Thungavi Panchayat ,Udumalai ,Madathukulam Panchayat Union ,
× RELATED அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்