×

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவிற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்

சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவிற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். “பல்வேறு மொழிகளில் பாடி இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர் ஜானகி. தனது இனிமையான குரல், இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags : S. Chief Minister ,Vijay Mourngal ,Janaki ,Chennai ,Vijay ,
× RELATED வியட்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த...