ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அதீத கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. அதீத கனமழையால் காட்டாறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகாலையில் மலையில் இருந்து வந்த சேறு, சகதி மற்றும் பாறைகள் வீடுகள், கடைகளில் புகுந்தன.
மண் மற்றும் பாறைகள் இழுத்து வரப்பட்டதில் குடியிருப்பு வீடுகள், வணிக வளாக பகுதிகள் சேதமடைந்தன. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கின. மேலும் சில வாகனங்கள் செனாப் ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன என்றும் இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
