×

பெரும்பான்மை பெற தவெக குதிரை பேரம்; இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

 

டெல்லி: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளது. மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்பட 6 அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகி தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளது. அதிமுக எம்பி இன்பதுரை அளித்த மனுவில்; அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது.

குதிரை பேரம் குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தவெக பெரும்பான்மை பெறுவதற்காக தொடர்ந்து குதிரை பேரம் நடக்கிறது. முதலமைச்சர் விஜயே நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தது தவறு; அதை சபாநாயகர் ஏற்றதும் தவறு என்று கூறினார்.

Tags : Electoral Commission ,Delhi ,MARAGATHAM KUMARAVEL ,JAYAKUMAR ,SATYABAMA ,ISAKI SUPPAIYA ,M. R. Vijayabaskar ,Vijayabaskar ,
× RELATED பெங்களூருவில் கல்குவாரியில் பெரிய...