×

“விஜய் கரூருக்கு செல்வதற்கு முன்பு செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக அரசு முயற்சி” – முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை: விஜய் கரூருக்கு செல்வதற்கு முன்பு செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக அரசு முயற்சி செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 108-ஐ 150 எம்.எல்.ஏ.க்களாக மாற்ற இலக்கு வைத்து தவெக குதிரை பேரம். குதிரைபேர அரசியலுக்கு எடுத்துக்காட்டு தவெக அரசு. எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு தாவுவது தான் குதிரை பேரத்துக்கு எடுத்துக்காட்டு. பணநாயகத்தை நம்பவில்லை, ஜனநாயகத்தைத்தான் நம்புகிறோம்.

குதிரை பேரத்துக்கு எதிரானது திமுக; குதிரை பேரத்தை திமுக ஆதரிக்காது. குதிரை பேரம் குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்த வேண்டும். வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை தவெகவில் இணைக்கிறார் விஜய். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. தவெகவில் இணைந்தவுடன் அவர்கள் புனிதர்கள் ஆகிவிடுவர். நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; தேர்தலை சந்தித்துதான் ஆட்சிக்கு வருவோம்.. மக்களை சந்திக்காமல் ஆட்சிக்கு வரவே மாட்டோம் கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரும் எண்ணம் எங்களுக்கு துளியும் கிடையாது.

கரூருக்கு செல்வதற்கு முன்னால் செந்தில் பாலாஜி கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது என்று கூறினார்.

Tags : Senthilbalaji ,Vijay Karur ,minister ,Ragupati ,Chennai ,Former minister ,Sentilpalaji ,
× RELATED அமமுக எம்எல்ஏ வழக்கில் ஏ1 ஆக விஜய்...