சென்னை: துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டத்தை எதிர்த்த வழக்கில் அரசுக்கு கால அவகாசம். தமிழ்நாடு அரசு கால அவகாசம் கேட்டதால் இறுதி விசாரணை ஜூலை 29ல் நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்திருந்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்கி பிரதான வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
