தனது நீண்ட நாள் காதலி மோனிகா டேவிட்டை, கடந்த 2023 ஆகஸ்ட்டில் திருமணம் செய்தார் கவின். டி.வி மூலமாக பிரபலமாகி, பிறகு உதவி இயக்குனராக பணியாற்றி, முக்கிய கேரக்டரில் நடித்ததன் மூலம் ஹீரோவாக மாறி வெற்றிபெற்ற அவர், வரும் ஆகஸ்ட் 14ம் தேதி நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ என்ற படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். இந்நிலையில், நேற்று கவின் மனைவி மோனிகா டேவிட், இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
தனது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ள நிலையில் கவின் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைவடைய செய்த இறைவனுக்கு நன்றி. இன்று (நேற்று )எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது.
