ஷூட்டிங்கில் நோராவுக்கு பளார் விட்ட நடிகர்: தலைமுடியை பிடித்து இழுத்ததாகவும் குற்றச்சாட்டு

 

மும்பை: திரைப்பட படப்பிடிப்பின்போது நடிகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதால் அவரை அறைந்ததாகவும், பதிலுக்கு அவர் தன் முடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டதாகவும் நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடனக் கலைஞராகவும் நடிகையாகவும் வலம் வரும் நோரா ஃபதேஹி, ‘பாகுபலி’ முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். ‘தோழா’ படத்திலும் டான்ஸ் ஆடியிருந்தார். இப்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘காஞ்சனா 4’ படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரு படத்தின் படப்பிடிப்பு வங்கதேசத்தில் உள்ள அடர்ந்த சுந்தரவனக் காட்டுப் பகுதியில் நடைபெற்றபோது, அவருடன் நடித்த துணை நடிகர் ஒருவர் நோராவிடம் வரம்பு மீறி நடந்துகொண்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த நோரா ஃபதேஹி அந்த நடிகரின் கன்னத்தில் அறைந்துள்ளார். பதிலுக்கு ஆத்திரமடைந்த அந்த நடிகரும் நோராவைத் திரும்ப அறைந்ததுடன், அவரது தலைமுடியைப் பிடித்து பலமாக இழுத்துள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே பயங்கர கைக்கலப்பு நடந்த நிலையில், படத்தின் இயக்குனர் குறுக்கிட்டு சண்டையை விலக்கி வைத்துள்ளார். இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நோரா ஃபதேஹி, இந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய நோரா ஃபதேஹி, ‘இதுபோன்ற ஒரு சம்பவம் எனது வாழ்நாளில் நடந்தது கிடையாது. இதுவே முதல்முறை. எந்த ஒரு பெண்ணுக்கும் இதுபோல் நடக்கக் கூடாது. ஆனால் நான் செய்த செயலால் அந்த நடிகருக்கு சரியான பதிலடி கொடுத்த நிம்மதி எனக்கு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: