×

‘தி ஒடிசி’ படத்தின் சிறப்புக்காட்சி: மும்பைக்கு வந்தார் கிறிஸ்டோபர் நோலன்

மும்பை: ஹாலிவுட்டில் உருவான ‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்பட பல்வேறு படங்களை இயக்கியுள்ள கிறிஸ்டோபர் நோலனுக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது படங்கள் தனித்துவமாகவும், அறிவியல்பூர்வமாகவும் இருப்பதால், அவற்றை உடனடியாக புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். உதாரணமாக அவர் இயக்கிய ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ போன்ற சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை சொல்லலாம்.

அவரது ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. தற்போது ‘தி ஒடிசி’ என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். வரும் 17ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் காட்சிகள், பிரத்தியேகமாக ஐமேக்ஸ் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல கவிஞர் ஹோமரின் ‘தி ஒடிசி’ என்ற கிரேக்க காவியத்தை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அறிவியல் புனைவுக்கதைகளை தேர்வு செய்யும் கிறிஸ்டோபர் நோலன், தற்போது புராணக்கதையை படமாக்கியுள்ளதால், இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஐமேக்ஸ் புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடலுக்காக கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவியும், தயாரிப்பாளருமான எம்மா தாமஸ், நடிகர் டாம் ஹாலண்ட் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதன்படி சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.

Tags : Christopher Nolan ,Mumbai ,Hollywood ,
× RELATED லவ் ஓ லவ் விமர்சனம்…