×

அசுரன் ஜெகே நெகிழ்ச்சி: திருப்புமுனை தந்த கமல்ஹாசன்

சென்னை: ‘அசுரன்’ படத்தில் நடித்தவர் ஜெகே. இவரது இயற்பெயர் ஜெய்கிருஷ்ணா. தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’, ‘லால்சலாம்’, ‘வா வாத்தியார்’, ‘கர’, ‘கருப்பு’ , ‘ப்ளாஸ்ட்’ என்று தொடர்ந்து அண்மையில் வெளிவந்த ‘லிங்கம்’ இணையத் தொடர் வரை தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவர் கூறியது: மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘இன்று நீ நாளை நான்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு அவர் ‘அந்த ஒரு நிமிடம்’ இயக்கினார்.

கமல் சார் நடித்த அந்தப் படத்தில் நான் பணியாற்றினேன். அப்படத்தின் மூலம் கமல் சாரிடம் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் நான் வாய்ப்பு கேட்டேன். அப்போது ‘விக்ரம்’ படம் தொடங்கியிருந்தது. அதில் உதவி இயக்குனராகச் சேர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அப்போது, கமல்ஹாசன், ‘இயக்குனர் ராஜசேகரிடம் உதவி இயக்குனர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நீ எனது ராஜ்கமல் பிலிம்ஸ் கம்பெனியில் வந்து சேர்ந்து விடு’ என்றார். கமல் சார் கொடுத்த வாய்ப்பு பல விதமான சினிமாவின் உருவாக்கம் சார்ந்த பல அடுக்குகளைப் பற்றி எனக்குப் புரிய வைத்தது. நிறைய நடிகர்கள், இயக்குனர்களை சந்திக்கும் வாய்ப்பும் கமல் சார் மூலம் கிடைத்தது. அப்படித்தான் கலைமணி அறிமுகமாகி, அவருடனும் பயணித்தேன்.

பிறகு பல படங்களில் உதவியாளராக இருந்துவிட்டு, விஜய் சேதுபதி நடித்த ‘வன்மம்’ படத்தை இயக்கினேன். கமல்ஹாசன் சாரின் அன்புதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையை தந்தது. பிறகு வெற்றிமாறனை சந்தித்தபோது, என்னை ஆடிஷன் நடத்தி, ‘அசுரன்’ படத்தில் நடிக்க வைத்தார். அதையடுத்து பல படங்களில் நடித்துவிட்டேன். ரஜினி சாருடன் ‘லால் சலாம்’ படத்தில் படம் முழுக்க வந்தேன். கமல் சார், ரஜினி சார் என இருவருடனும் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.

Tags : Asuran Jege Lainichi ,Kamal Haasan ,Chennai ,Jege ,Jaykrishna ,Major Sundarrajan ,Kamal ,
× RELATED லவ் ஓ லவ் விமர்சனம்…