ஆபாசம் எதிர்பார்த்து இன்ஸ்டா பக்கம் வராதீங்க: ரசிகர்களை எச்சரித்த பாயல் ராஜ்புத்

சென்னை: டெல்லியில் பிறந்து வளர்ந்த பாயல் ராஜ்புத், ‘சன்னா மெரேயா’ எனும் பஞ்சாபி படத்தில் நடித்து 2017ல் சினிமாவில் அறிமுகமானார். ‘ஆர் எக்ஸ் 100’ எனும் தெலுங்கு படத்தில் நடித்து பெரிய வெற்றியை பெற்றார். வினய் உடன் இணைந்து ‘இருவர் உள்ளம்’ தமிழ் படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். இந்த ஆண்டு லெஜண்ட் சரவணா நடிப்பில் வெளியான ‘லீடர்’ படத்தில் ஸ்பையாக நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் இன்ஸ்டாவில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் தொடங்கினார். அதை தொடங்கியதில் இருந்தே இவருக்கு ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எக்ஸ்க்ளூசிவாக போடுங்கள் என சில நெட்டிசன்கள் வற்புறுத்திய நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபாச கன்டென்ட் எதிர்பார்த்து என்னை யாரும் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டாம். அதற்கு இங்கு இடமில்லை. எந்தவொரு ஃபில்டரும் இல்லாமல், என்னோட ரியலை பார்க்க வேண்டும் என விரும்புவர்களுக்கு மட்டுமே சப்ஸ்கிரிப்ஷன் என தெளிவாக கூறியுள்ளார் பாயல் ராஜ்புத். இதனால் சில ரசிகர்கள் அவரது கருத்தை வரவேற்றும் சிலர், கடுமையாக விமர்சித்தும் கமென்ட் செய்து வருகிறார்கள்.

Related Stories: