×

நடிகைகளுக்கு பொறுமை தேவை: நபா நடேஷ் அட்வைஸ்

சென்னை: தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நபா நடேஷ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழில் நடிக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேச தெரியும். விரைவில் சரளமாக தமிழில் பேசி அசத்துவேன். தமிழ் ரசிகர்களிடம் அன்பை பெறவேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. அது நடக்கும் என்று நம்புகிறேன். திரைத்துறையில் நடிகர்களை காட்டிலும் நடிகைகளுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. அந்த சவால்களை தாண்டி சாதனை படைக்க பொறுமையும், நம்பிக்கையும்தான் தேவை. எல்லா நடிகைகளுக்கும் அது இருக்க வேண்டும் என்றார்.

Tags : Naba Nadesh ,Chennai ,
× RELATED பவனுடன் நடிக்க மறுத்த பூஜா ஹெக்டே