×

5 மொழிகளில் உருவாகும் ஃபீல் மை லவ்

சென்னை : பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல பான்-இந்தியா திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ஏ.என்.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ‘ஃபீல் மை லவ்’.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அவரது மகன் ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார். எம்.எஸ். சதீஷ் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இசையமைக்கின்றனர்.அஜய் மனோஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஹரி பிரகாஷ் எம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

‘‘வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்\” என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும்’’ என்கிறார் இயக்குனர் ஹரி பிரகாஷ்.

Tags : Chennai ,A.N. Balaji ,M.S. Bhaskar ,Aditya Bhaskar ,Aira ,Ammu Abhirami ,Rajayyappa ,Noble James ,Priyanka ,
× RELATED பவனுடன் நடிக்க மறுத்த பூஜா ஹெக்டே