சென்னை: தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.எஸ், தங்கப்பாண்டி.டி இணைந்து தயாரித்துள்ள படம், ‘அர்ஜூனன் பேர் பத்து’. ரா.ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். இது அவர் நடித்துள்ள 300வது படமாகும். வரும் ஜூலை 17ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
வாகன திருட்டு மாஃபியாவை மையப்படுத்தி, காமெடியுடன் கூடிய விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களுடன் படம் உருவாகியுள்ளது. யோகி பாபு, அனாமிகா மஹி, காளி வெங்கட், பி.லெனின் பாரதி, அருள்தாஸ், மதன் தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, எம்.சவுந்தர்யா சரவணன், சென்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமணன், ரஞ்சன் குமார் நடித்துள்ளனர். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார்.
