×

கயாடு லோஹருக்காக கதையில் மாற்றமா: இதயம் முரளி இயக்குனர் விளக்கம்

சென்னை: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன், தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘இதயம் முரளி’. அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், பஹத் பாசில், தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் குறித்து ஆகாஷ் பாஸ்கரன் கூறியது: இந்த படத்தை தொடங்கும்போது, கயாடு லோஹர் பிரபலமாகவில்லை. அதற்கு டிராகன் படம் வெளியாகி, அவர் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

அதனால் இந்த படத்தை அவரது கேரக்டரை மேலும் மெருகேற்றி, கதையில் மாற்றம் செய்தீர்களா என கேட்கிறீர்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. காரணம், இதில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் என இருவருக்குமே சம அளவில் வாய்ப்பு உள்ளது. பள்ளி பருவத்தில் பிரீத்தி முகுந்தனை காதலிக்கும் அதர்வா, கல்லூரி காலத்தில் கயாடு லோஹரை காதலிக்கிறார்.

இரண்டு காதலையும் சொல்லாமல் மனதிற்குள் வைத்துக்கொள்கிறார். இதன் விளைவுகள் என்ன என்பதை படம் சொல்கிறது. விண்வெளி வீராங்கனையாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இதற்காக விண்வெளிக்கான செட் போடப்பட்டு படமாக்கினோம். ஜூலை 10ம் தேதி படம் ரிலீசாகிறது. தமன் இசையில் பாடல்கள் ஹிட்டாகியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளது.

Tags : Kayadu Lohar ,Ihayyam Murali ,Chennai ,Aakash Bhaskaran ,Don Pictures ,Adarva ,Preeti Mukundan ,Bahat Basil ,Taman ,Aakash Baskaran ,
× RELATED சினி மினி நியூஸ்