கார்த்தி, 2 வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற படம், ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தின் அடுத்த பாகம், ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜரூராக நடக்கிறது. இப்படம் செப்.10ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கிலும் வெளியாகிறது.

