×

வேதாரண்யத்தில் இனாம்நில விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

 

வேதாரண்யம், ஆக. 3: வேதாரண்யத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இனாம்நில விவசாயிகள் மற்றும் வீடு மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் இனாம் நில விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இனாம் நிலை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமுர்த்தி, வழக்கறிஞர்கள் சுப்பையன், கிரிதரன், நமச்சிவாயம் அன்பரசு, தமிழக வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் செந்தில், தமிழக வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத்தலைவர் தென்னரசு உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இனாம் வகை நிலங்களில் கடந்த சில வருடங்களாக குத்தகைதாரர்களகவும் வாடகைதாரர்களாகவும் மாற்றப்பட்ட அனைத்து விவசாயிகளின் குத்தகைகளையும் வாடகையும் ரத்து செய்திட வேண்டும். வேதாரண்யத்தில் அனைத்து குடிக்கான நிலங்களில் குடிவார உரிமை உடன் அனுபவத்தில் உள்ள அனைவரும் கோவிலுக்கு எந்தவிதமான குத்தகை வாடகை செலுத்த மாட்டோம் எனவும், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை அரசிடம் மட்டும் செலுத்துவோம் என்றும், இனாம் ஒழிப்பின் போது பட்டா பெற்று அனுபவத்தில் உள்ள மக்களின் நில உரிமை பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலம் பூஜ்ஜியம் மதிப்பு செய்வதன் மூலம் நில உரிமையை பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும், இனாம் ஓழிப்பு நடந்த போது பட்டா பெற தவறிய மக்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களவை போல பட்டா பெறுவதற்கான வழிமுறை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிவில் குடிகாணி சங்க பொருளாளர் அருள் ஜோதி நன்றி கூறினார்.

Tags : Vedaranyam ,Tamil Nadu Farmers Protection Association ,Kinneret ,Tenant Cultivators Farmers Protection Association ,Land Farmers ,Land Owners Movement ,Rajaji Park… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...