போடி, ஆக.1: போடி அருகே செங்கல் காளவாசல் உரிமையாளர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போடி அருகே மீனாட்சிபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (55). செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இவர் தனது தொழில் காரணமாக, சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், கடந்த 4 மாதமாக செங்கல் காளவாசல் பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஜூலை 27ம் தேதி, வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது மனைவி போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, கணேசனை தேடி வருகின்றனர்.
