×

ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ்யஷ்விர், ரோகித்தும் தகுதி

 

கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் பங்கேற்க இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, யஷ்விர் சிங், ரோகித் யாதவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். தகுதிச் சுற்று போட்டியின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 5வது இடம் பிடித்தார். இந்த பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்கா பதிரகே (82.84 மீ.) முதலிடமும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (81.29 மீ.) 2வது இடமும் பிடித்தனர்.ரோகித் யாதவ் (78.37 மீ.) 9வது இடம், யஷ்விர் சிங் (78.36 மீ.) 10வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (78.63 மீ.) 7வது இடம் பிடித்தார். இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெற உள்ளது.

Tags : Neeraj Chopra ,Yashvir Singh ,Rohit Yadav ,Glasgow Commonwealth Games ,
× RELATED காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு...