×

2026 ஏப்.-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 6% சரிந்துள்ளது: உலக தங்க கவுன்சில் அறிவிப்பு

டெல்லி: 2026 ஏப்.-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 6% சரிந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2025 ஏப்.-ஜூனில் 139.7 டன்னாக இருந்த இந்தியாவின் தங்கத் தேவை 2026 ஏப்.-ஜூனில் 131.4 டன்னாக சரிந்துள்ளது. தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு, திருவிழாக்கள் இல்லாமை போன்ற காரணங்களால் கடந்த மாதங்களில் விற்பனை சரிந்துள்ளது. எனினும் தங்கம் விலை அதிகரித்ததால் ரூபாய் மதிப்பில் 2025 ஏப்- ஜூனில் ரூ.1,32,500 கோடியாக இருந்த இறக்குமதி இவ்வாண்டு ரூ.1,98,100 கோடியாக உயர்ந்துள்ளது. 2026 முழு ஆண்டுக்காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 650 டன்னில் இருந்து 750 டன் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2026 ஏப்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்க நகைகளுக்கான தேவை 15% குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2025 ஏப்.-ஜூனில் 88.5 டன்னாக இருந்த நகைகளுக்கான தேவை இவ்வாண்டு 75 டன்னாக குறைந்துவிட்டதாக கவுன்சில் தெரிவித்துள்ளது. புதிய தங்க நகைகளுக்கான தேவை சரிந்துள்ள போதிலும் முதலீட்டுக்காக தங்கம் வாங்குவது 9% உயர்ந்துள்ளது.

பழைய தங்க நகைகளை கொடுத்து அதன் மதிப்புக்கு புதிய நகைகள் வாங்குவது ஏப்.- ஜூனில் 17% சரிந்துள்ளது. 2025 ஏப்.- ஜூனில் பொதுமக்கள் 23 டன் பழைய நகைகளை புதிதாக மாற்றியதாக உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 2026 ஏப்.- ஜூன் காலாண்டில் 19.2 டன் எடையுள்ள பழைய நகைகளை மக்கள் புதிதாக மாற்றியுள்ளனர்.

2025 ஏப்.- ஜூனில் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தை விட 2026 ஏப்.- ஜூனில் இறக்குமதி 23% சரிந்துள்ளது. 2025 ஏப்.- ஜூனில்இந்தியா வெளிநாடுகளில் இருந்து 127.4 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. 2026 ஏப்.- ஜூனில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 98.1 டன்னாக சரிந்துவிட்டதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2025ன் 2ம் காலாண்டில் உலக சந்தையில் 3280 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2026ல் 4506 டாலராக உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில் 2025 ஏப்.-ஜூனில் வரி விதிப்புக்கு முன் ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ.94,875-க்கு விற்பனையானது. எனினும் 2026 ஏப்.ஜூன் காலாண்டில் வரி விதிப்புக்கு முன் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை ரூ.1,50,744ஆக உயர்ந்துவிட்டது.

Tags : India ,World Gold Council ,Delhi ,
× RELATED திராவிடர் கழகத்தின் பரப்புரை...