பொது தேர்வு திருத்த மசோதாவால் மாற்றம் ஏற்பட போவதில்லை – மாநிலங்களவையில் கார்கே பேச்சு

டெல்லி: பொதுத் தேர்வு திருத்த மசோதா, 2026 நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்ற இந்த மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது.இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வினாத்தாள் கசிவால் எத்தனை அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேர் தாக்கப்பட்டனர், எத்தனை பெற்றோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இன்னலுக்கு ஆளாகினர்?

விவாதத்திற்காக இங்கு கொண்டுவரப்பட்டுள்ள பொதுத் தேர்வு திருத்த மசோதா, 2026′-ல் நீங்கள் வெறும் எண்களை மட்டுமே மாற்றியிருக்கிறீர்கள். அதிக அபராதம், கடும் தண்டனை, சிறப்புப் பணிக்குழு, விரைவு நீதிமன்றங்கள் போன்ற அம்சங்களை சேர்த்துள்ளீர்கள். இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை, மாற்றமும் ஏற்படாது.

தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறது மற்றும் வினாத்தாள் கசிவு இல்லாமல் அதை எவ்வாறு தயாரித்து கையாளுகிறீர்கள் என்பதில் தான் உண்மையான மாற்றம் உள்ளது; அதுவே முக்கியம். சட்டத்தை வலுவாக்க 2024-ஆம் ஆண்டிலேயே நாங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். அப்போது அதை ஏற்காத நீங்கள், இப்போது இரண்டு ஆண்டுகள் கழித்து செய்துள்ளீர்கள், ஏன் 2024-ஆம் ஆண்டிலேயே இதை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

 

 

Related Stories: