நாகப்பட்டினம், ஜூலை 30: நாகப்பட்டினம் அருகே அரசு இலவசமாக வழங்கிய பட்டா இடத்தில் அமைத்த கூரையை பிரித்து அபகரித்த இடத்தை மீட்டுத்தரக் வேண்டும் என தூய்மை பணியாளர் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் நகராட்சியில் தனலட்சுமி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2021 ம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பொருளாதார வசதி இல்லாததால் பட்டா இடத்தில் வீடு கட்ட முடியாமல், மாதம் ரூ.3 ஆயிரம் வாடகை வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது தனது பட்டா இடத்தை பராமரித்து வந்தார்.
இந்நிலையில் வாடகை செலுத்த முடியாத சூழ்நிலை தனலட்சுமிக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது நண்பர்களிடம் கடன் பெற்று, அரசால் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கீற்று கொட்டகை அமைத்து குடியேற முடிவு செய்தார். ஆனால் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சிலர் அந்த கீற்று கொட்டகையை பிரித்து அகற்றி தனலட்சுமியை அங்கிருந்து வெளியே செல்லும் படி கூறினர். இதனால் அகற்றப்பட்ட கீற்று கொட்டகை முன்பு தனலட்சுமி அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது அவர் எனக்கு இந்த பட்டாவை கலெக்டர் முதல் வருவாய் துறை அலுவலர்கள் அனைவரும் ஆய்வு செய்து பட்டா வழங்கினார். ஆனால் எனது இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் அவர்களின் இடம் என்றுகூறி உரிமை கோருகின்றனர். இதுகுறித்து செல்லூர் விஏஓ அலுவலகத்தில் புகார் அறித்தும் பலன் இல்லை. மேலும், தமிழக அரசு வழங்கிய தனது பட்டா இடத்தை மீட்டுத் தர வேண்டும் என்றார்.
65 பேர் தேர்வு
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் என மொத்தம் 65 மகளிர் தொழில்முனைவோர் அடுத்த கட்ட தொழில்முனைவு வளர்ப்பு ஆதரவிற்காகத் தேர்வு.
