சென்னை: துணைவேந்தர்கள் பதவிக்கு தேடுதல் குழு பரிந்துரைத்த பட்டியலில் உள்ள ஒருவரை தேர்வு செய்ய அனுமதி தர உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 15 பல்கலை.களுக்கு துணைவேந்தர்கள் இல்லாததால் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. வழக்கு தொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தந்த உத்தரவாதம் காரணமாக துணைவேந்தர்கள் நியமனம் முடங்கியுள்ளது.
