×

கறம்பக்குடி அருகே விஷ பூச்சிகளுடன் அரசு தொடக்க பள்ளி கட்டிடம்

*புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்

கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பாப்பாபட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பாப்பாபட்டி, புதுக்கோட்டை விடுதி கல்லுமடை, காடம்பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளன. குறிப்பாக புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

அப்பகுதி குழந்தைகளின் மாணவர்களின் பெற்றோர்களின் நலன்கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் தற்போது அரசு வேலைகளிலும் மற்ற துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது.

அந்த வழியாக புதிய பள்ளி கட்டிடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். குறிப்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் புதுக்கோட்டை விடுதி பள்ளி கட்டிடம் தற்போது மிகவும் பழுதடைந்து சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தாக உள்ளது.

அங்கன்வாடி அருகே அமைந்துள்ள கட்டிடத்தின் வழியாக செல்வோர் ஒருவித பயத்துடனே சென்று வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி பழுதடைந்து சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விஷ ஜந்துகள் அதிகம் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Tags : Karambakudi ,Pappapatti panchayat ,Karambakudi panchayat ,Pudukkottai district ,Pappapatti ,Pudukkottai Hotel ,Kallumadai ,Kadampatti ,
× RELATED சீமான் குறித்து அவதூறு பேசியதாக...