×

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் ஜடேஜா, பும்ரா: புதுமுக வீரராக சரன்ஷ் ஜெயின்

மும்பை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜடேஜா, பும்ரா மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். புதுமுக வீரராக சரன்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் வரை காலே மைதானத்திலும், 2வது டெஸ் ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெற உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூரமாக அறிவித்து உள்ளது. சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின்.

காயத்தை அணியில் இடம்பெறாத இருந்த ஜடேஜா, பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். ஆனால், பிசிசிஅயின் சிறப்புத் திறன் மையம் வழங்கும் உடற்குதியை பொறுத்தே பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் ஆடும் லெனில் இடம்பெறுவார்களா என்பது தெரியவரும். மத்திய பிரேதேசத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து உள்ளார். டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இந்திய அணி ஆகஸ் 7ம் தேதி கொழும்புவில் தொடங்கும் 4 நாள் பயிற்சி போட்டீல் பங்கேற்க உள்ளது.

Tags : Sri Lanka ,Jadeja ,Bumrah ,Saransh Jain ,Mumbai ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெனீவாவில் நடைபெறும் என ஃபிடே அறிவிப்பு !