×

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 20 அதிகாரிகள் இடமாற்றம்

 

விருதுநகர், ஜூலை 29: விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துக்கள் காரணமாக லஞ்சப் புகார் எழுந்ததால், கலெக்டர் அலுவலகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளுக்கான அனுமதி, உரிமம், தடையில்லா சான்று, சல்பர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கும் வருவாய் துறையை சேர்ந்த \”இ\” பிரிவில் பணியாற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர், குறுவட்ட ஆய்வாளர், தட்டச்சர், உதவியாளர்கள் என உள்ளிட்ட 20 பேரை ஒரே நேரத்தில் பணிமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டது. பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் பெறுதல், தடையில்லா சான்றிதழ் வழங்கிட அதிகளவில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

Tags : Virudhunagar Collectorate ,Virudhunagar ,Collectorate ,Virudhunagar district ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...