விவசாய தொழில் முனைவோர் வேளாண் உட்கட்டமைப்புக்கு ரூ.16 கோடி கடன் இலக்கு

 

ஊட்டி, ஜூலை 29: விவசாய தொழில் முனைவோர் வேளாண் உட்கட்டமைப்புக்கு ரூ.16 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: விவசாய தொழில் முனைவோர் வேளாண் உட்கட்டமைப்புக்கு ரூ.16 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உள்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக ஒன்றிய அரசு, வேளாண் உள்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி கடன் 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

Related Stories: