×

ஸ்ரீ ரங்கம் கோயில் கோபுரத்தில் `ஷூ’ காலுடன் அமைச்சர் ஆய்வு

 

திருச்சி: திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு கோரத்தில் பராமரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. இந்த பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கடந்த சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, ஸ்ரீ ரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தில் அமைச்சர் ரமேஷ் காலில் ‘ஷூ’ அணிந்தபடி பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட வீடியோ தற்பொது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் கோயில் மிகவும் புனிதமான ஸ்தலம். இக்கோயிலில் அமைச்சர் `ஷூ’ அணிந்து கொண்டு கோபுர பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Sri ,Rangam Temple Gopuram ,Trichy ,eastern ,Sri Rangam Ranganathar Temple ,Hindu Religious and Endowments ,Minister ,Ramesh ,Sri Rangam Temple… ,
× RELATED பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில்...