கோவையை வந்தடைந்த 1,300 டன் மானிய உரம்.. 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.!

கோவை: கோவை உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் 1,300 டன் உரங்கள் ரயில் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. ரயில் மூலம் கோவை கொண்டு வரப்பட்டுள்ள ரூ.10 கோடி மதிப்பிலான 1,300 டன் உரங்கள், விரைவில் விசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ், ரூ.10 கோடி மதிப்புள்ள 1,300 டன் மானிய உரங்கள் சரக்கு ரயில் மூலம், கோவை கூட்ஸ் ஷெட் கிடங்கிற்கு வந்து சேர்ந்துள்ளது. சமீப வாரங்களாக உரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், தட்டுப்பாடு இல்லாமல் தடையின்றி விநியோகிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இது குறித்து பேசிய அதிகாரிகள் தற்போது வந்து சேர்ந்துள்ள மானிய உரங்கள் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவர். தற்போது நடைபெற்று வரும் சாகுபடிப் பருவத்தைக் கருத்தில் கொண்டு, கூட்ஸ் ஷெட் கிடங்கில் இறக்கப்பட்டுள்ள இந்த உர மூட்டைகளை,லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உர விநியோக மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒன்றிய அரசின் மானிய விலையில் இந்த உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

 

Related Stories: