×

நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொளப்பாடு அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கீழ்வேளூர், ஜூலை 28: கொளப்பாடு அரசு பள்ளியில், நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் டெங்கு எதிர்ப்பு மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைஞாயிறு வட்டாரத்திற்குட்பட்ட நீர்முளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திருக்குவளை தாலுக்கா கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொளப்பாடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயா தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், நீர்முளை சுகாதார ஆய்வாளர் தாயுமானவன் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களிடம் டெங்கு கொசுபுழு உருவாகாமல் தடுக்கும் முறைகள், தண்ணீரை சுத்தமாக மூடி பாதுகாப்பது, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட முக்கிய விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துக் கூறினார்மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், டெங்கு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Kolapadu Government School ,Neermula Primary Health Center ,Kilvelur ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...