×

அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

 

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், விருதுநகர் வடக்கு மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த விருதுநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் பூலாங்கால் எம்.சித்திக் தலைமையில் மு.ரஜிஸ்அகமத், எம்.கோபிநாத், இமாம் அலி உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்ஏ., விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுத்தம்பி, திருச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி, காரியாபட்டி நகர செயலாளர் ஆர்.கே.செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : AIADMK ,DMK ,Chennai ,president ,M.K. Stalin ,Anna Arivalayam, Chennai, ,Virudhunagar North District ,Virudhunagar ,District ,Minority Welfare Unit ,Vice President ,Bhulangal M. Siddique ,M. Rajis Agamat ,M. Gopinath ,
× RELATED மதுரவாயல் பகுதியில் புதிதாக...