×

தேன்கனிக்கோட்டை அருகே குண்டும், குழியுமாக மாறிய தார்சாலை

*சீரமைக்க வலியுறுத்தல்

தேன்கனிக்கோட்டை : பல்லாங்குழியாக உள்ள சின்னபேளகொண்டப்பள்ளி சாலையை சீரமைக்க ேவண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம் பேளகொண்டப்பள்ளி முதல் சின்னபேளகொண்டப்பள்ளி செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தினமும் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் செல்கின்றன.

நூற்றுக்கணக்கான டெம்போ, லாரிகள், இருசக்கர வாகணங்கள், பள்ளி வாகனங்கள், கல்லூரி வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், பூனப்பள்ளி, ஆனேக்கல்லுக்கு கர்நாடகா வாகனங்கள் அதிகம் வந்து செல்கின்றன.

இந்த சாலை பல்லாங்குழியாக மாறி உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. தற்போது மழை காலம் என்பதால், சேறும், சகதியாக மாறி விடுகிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thenkani Kottai ,Chinnapelakondapalli road ,Pelakondapalli ,Chinnapelakondapalli ,Thali ,Krishnagiri district ,
× RELATED பொள்ளாச்சி அருகே மக்கள் எதிர்ப்பை மீறி கோமங்கலம் சுங்கச்சாவடி திறப்பு