×

வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற 2 பேர் கைது: 5 கிலோ பறிமுதல்

 

திருப்பூர், ஜூலை 27: திருப்பூர், காலேஜ் ரோடு, மரக்கடை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார், அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கிருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரிஜ் குமார் (28) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Tiruppur ,Narcotics Control Police ,Marakkadai ,stop ,College Road, Tiruppur ,
× RELATED சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் லாரியை...