மாணவர்களுக்கு தேவையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எஸ்சி,எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: மாணவர்களுக்கு தேவையற்ற நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்சி,எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக்கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி,எஸ்.டி பணியாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் டேவிட் மகிமைதாஸ் வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வு குளறுபடிகள், நீட் தேர்வால் மாணவர்களின் மரணம் உள்ளிட்ட பல காரணங்களை எதிர்த்து டெல்லியில் ஆரம்பித்த மாணவர்களின் போராட்டம் இந்தியா முழுமைக்கும் பரவியதை அடுத்து, ​மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார் . இளைஞர்களுடைய தன்னெழுச்சி போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கான எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்திய அரசு அடிபணிந்து உள்ளது.

10 நாட்களாக டெல்லியில் நடந்து வரும் பிரச்சனைகள் காவல் துறையினுடைய தடியடிகள் உயிரிழப்புகள் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பதை தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் வரவேற்கிறது. மாணவர்களுக்கு தேவையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: