×

போக்குவரத்து ஒப்பந்த மோசடி முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜேஷ் சவுகான் மீது வழக்கு

துர்க்: சட்டீஸ்கரின் துர்க் பகுதியை சேர்ந்தவர் தின்கர் விஸ்வகர்மா. இவரிடம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ராஜேஷ் ஒடிசா மாநிலம், கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் போக்குவரத்து ஒப்பந்தம் தனது நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்காக லாரிகளை பயன்படுத்துவதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தின்கரிடம் இருந்து முதலீடு செய்வதற்காக பணத்தை கேட்டுள்ளார். மேலும் ஒப்பந்தத்திற்கான பணி ஆணையையும் காட்டி அவ்வப்போது பணத்தை பெற்று வந்துள்ளார்.

சுமார் ரூ.15லட்சத்துக்கும் அதிகமாக பணத்தை தன்வருக்கு கொடுத்துள்ளார். பின்னர் அவர் சரியான முறையில் பதிலளிக்காத நிலையில் இது குறித்து கடந்த 16ம் தேதி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டதோடு விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜேஷ் சவுகான் மீது மோகன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Rajesh Chauhan ,Durg ,Dinkar Vishwakarma ,Chhattisgarh ,Rajesh ,Jindal Steel Company ,Keonjhar district ,Odisha ,
× RELATED மாணவர் போராட்டத்துக்கு பணிந்தது...