×

CJP கட்சியினரின் கோரிக்கைகள் ஏற்பு: நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டம் வாபஸ்!

 

டெல்லி: ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளித்தனர். தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா, சி.ஜே.பி. பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சௌரவ் தாஸ்; தர்மேந்திர பிரதான் ராஜினாமா என்ற எங்கள் முதல் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. கரப்பான் ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது என அரசு உறுதி அளித்துள்ளது.

நீட் தேர்வால் இறந்த மாணவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. நாங்கள் முன்வைத்த 3 கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றது. ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம். போராட்டக்களத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா; டெல்லி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் போராடியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்.

வழக்குகள் ரத்து செய்யப்படும் வரை மாணவர்கள் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காது. கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். ஒன்றிய அரசு – சி.ஜே.பி. இடையே 4 வாரங்களில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CJP ,Delhi ,Karapanpuchi Janata Party ,Jantar Mander ,Union Education Minister ,Dharmendra Pradhan ,NEET ,
× RELATED காவிரி, மேகதாது விவகாரத்தில்...