×

காமராஜ் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்க: சபாநாயகரிடம் அமமுக மனு

 

சென்னை: காமராஜ் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் அமமுக சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ் வெற்றி பெற்றார். அமமுக சார்பில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு சென்ற ஒரே எம்எல்ஏ காமராஜ் ஆவார். இவர், அக்கட்சிக்கு ஆதரவாக செயல்படாமல் தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மற்றும் அவரது ஆட்சியை பாராட்டி பேசினார்.

ஆனால், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். காமராஜ் எம்எல்ஏ. தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அமமுக பொருளாளர் கரிகாலன் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து, “மன்னார்குடி தொகுதியை சேர்ந்த அமமுக எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று மனு அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : KAMARAJ ,AMUKA ,Chennai ,Aamuka ,Kamraj ,Tamil Nadu ,Ammuka ,Mannarkudi ,
× RELATED மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய...